வரும் மக்களவை தேர்தலில், பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிலைப் படுத்தினால், அவரை ஆதரிப்பதாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தேசிய தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது, 80 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றும், 38 தொகுதியை மட்டுமே பிடித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைக்கும் முடிவை ராகுல் எடுத்தார் என்றும் அவரது இத்தொலைநோக்கு பார்வை என்னை கவர்ந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், முதிர்ச்சியான தலைவர்கள் எடுக்கும் முடிவை அவர் எடுத்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது என்றும், மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்தார்.
ராகுல் பிரதமராக ஆதரவு அளிப்போம்: தேவகவுடா
Popular Categories



