
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் முறைகேடு: ஒரே அதிகாரி அரசாங்கத்தை ஏமாற்றி பலகோடி மோசடி செய்தது எப்படி? அதிர்ச்சி தகவல்கள்!
சென்னை: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் திட்டத்திற்கு போலி ஆவணங்கள் பெயரில் இழப்பீடு வழங்கிய வழக்கில் குற்றம் புரிந்த எவரும் தப்பிவிடக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. போக்குவரத்துக்கு நெரிசல் மிகுந்த சென்னை – பெங்களூரு தேசிய நெடுசாலை என் 4கை அகலப்படுத்தி ஆறுவழிச்சாலையாக மாற்றும் பணி நடை பெற்றுவருகிறது. அதற்காக நிலம் கொடுத்தவர்கள் முறைகேடாக இழப்பீடு பெற்றனர் என்பது புகார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பத்தூர் தாலுகாவில் அடங்கிய பீமன் தாங்கள் கிராமத்தில், அரசு நிலத்தை போலி பட்டாவின் முலம் அபகரித்தவர்கள், அரசிடமே அந்த நிலத்தை விற்று பல கோடி ரூபாய் இழப்பீடாக பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மீது நடவடிக்கை கொண்ட காஞ்சி மாவட்ட ஆட்சியர் 45 ஏக்கர் நிலத்திற்கான பட்டவை ரத்து செய்தார். போலி பட்டா மூலம் ஈழப்பீடுபற்றி 85 பேரின் வங்கிக்கணக்குகளும் முடக்கப் பட்டன, சென்னையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
சி.பி.சி.ஐ டி போலீசாரால் நடத்தப்படும் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நிதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்கள் 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ராஜேந்திரன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் இந்த திட்டத்திற்காக 190 கோடி ரூபாய் வழங்க பட்டுள்ள நிலையில், திட்டத்தின் சிறப்பு தாசில்தாராக நியமிக்கப்பட்ட வருவாய் அதிகாரிதான் 20 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு வழங்கியுள்ளதாகவும், மீதம் உள்ள தொகை எப்படி வழங்க பட்டுள்ளது என கண்டறிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 190 கோடி ரூபாய் எவ்வாறு வழங்கப்பட்டது என தற்போது மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ர.சுரேஷ் குமார் முன்பு மீண்டும் விசரணைக்கு வந்த போது முன்னாள் மாவட்டவருவாய் அதிகாரி நர்மதா உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜர் ஆகவில்லை. சி.பி.சி.ஐ.டி. தரப்பில் இந்தவிவகாரத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 18,57,47,128 ரூபாய் தோகை மீட்கப்பட்டு இந்த வழக்கின் கணக்கில் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மீதம் உள்ள 2 கோடி ரூபாயும் வசூலிக்க படும் என்று உறுதி அளிக்கப்பட்டது, இதை அடுத்து நீதிபதி முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா கட்டாயம் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், தவறினால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணையை மட்டும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
தவறாக இழப்பீடு வழங்க பட்ட விவகாரத்தில், தவறு இணைந்தவர்கள் எவரும் தப்பிவிட கூடாது என சி.பி.சி.ஐ டி. காவல் துறையை அறிவுறுத்திய நீதிபதி, இழப்பீட்டை வசூலித்தது மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்த விசாரணையின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யவும் சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டு பிரதான வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளர். நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சென்னை – பெங்களூரு தேசிய நெடுச்சாலை அகல படுத்தும் திட்டத்தில் போலி ஆவணங்கள் பெயரில் இழப்பீடு வழங்கிய வழக்கில், மேலும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.





