spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்கொலைகார ‘அன்பு’ போதகர்கள்! கனடா மக்களிடம் ‘பாவமன்னிப்பு’ கேட்பாரா போப்..!?

கொலைகார ‘அன்பு’ போதகர்கள்! கனடா மக்களிடம் ‘பாவமன்னிப்பு’ கேட்பாரா போப்..!?

- Advertisement -

பூர்வக்குடி இன அழிப்பு.! தொடரும் கிறிஸ்தவ அராஜகம்.!!

கனடாவில் வாழும் உள்ளூர் மக்களின் கோபத்தால், அங்கு உள்ள சர்ச்சுகள் மீது, குறிப்பாக கத்தோலிக்க சர்ச்சுகளை, அங்கு உள்ள மக்கள் தாக்கியும், சில சர்ச்சுகளை, முழுவதுமாக எரித்தும் வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே, கனடாவில் வாழும் பூர்வகுடி மக்கள், கிறிஸ்தவர்கள் மீது கோபம் கொண்டு வந்தனர். தாங்கள் எப்படி மதமாற்றம் செய்யப் பட்டோம், தங்களுடைய வாழ்க்கை முறை எப்படி மாற்றப் பட்டது, என்பதை நினைத்து, மிகுந்த கோபம் கொண்டனர்.

கோபத்திற்கான காரணம்:

கனடாவில் உள்ள பூர்வக்குடி மக்களின் குழந்தைகள் படித்த ஒரு பள்ளிக் கூடத்தில், 1,100 குழந்தைகளின் எலும்புகள் தோண்டி எடுக்கப் பட்டது. வழக்கமாக கிறிஸ்துவர்கள் வழக்கப்படி, ஒருவர் மரணம் அடைந்தால், அவர்கள் புதைக்கப் படும் இடத்தில், சிலுவைகள் நடப்பட்டு இருக்கும். ஆனால், புதைக்கப் பட்ட அந்த இடம், முழுவதும் அகற்றப்பட்டு, புல் தரையாக மாற்றப் பட்டு உள்ளது. குழந்தைகளின் மறைவை, திட்டமிட்டு சர்ச் நிர்வாகம் மறைத்து விட்டனர் எனக் கருதி, அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

1915 முதல் 1963 ஆம் ஆண்டு வரையில், 3,200க்கும் மேற்பட்ட குழந்தைகள் வரை, கனடாவில் மரணம் அடைந்ததாக, அந்த  அமைப்பு ஆராய்ந்து, கருத்து தெரிவித்து உள்ளது. எனினும், இது போன்ற புள்ளி விவரங்கள், பள்ளிக்கூட பதிவுகளில் எங்கும் காணப் படவில்லை.

உண்மை மற்றும் நல்லிணக்க அமைப்பின் ஆய்வு அறிக்கை படி, (Truth and Reconciliation Commission – T.R.C.), 2015 ஆம் ஆண்டில், 6,000 குழந்தைகள், இவ்வாறு இறந்ததாக குறிப்பிடுகின்றனர். அவற்றில், 4,100 குழந்தைகளின் உடல்கள் மட்டுமே, கண்டு எடுக்கப்பட்டு உள்ளது, என்றும் தெரிவித்து உள்ளனர்.

T.R.C. அமைப்பின் அலுவலர் குறிப்பிடுகையில், “இது போன்ற பல கடந்த கால கொடுஞ் செயல்கள், வரும் காலத்தில் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பு உள்ளது” என கூறி உள்ளார்.

சமீபத்திய 2021 ஆம் ஆண்டின் கணக்கு எடுப்பின் படி, சுமார் 15,100 குழந்தைகள், இவ்வாறு இறந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கணித்து உள்ளனர்.

கத்தோலிக்க சர்ச் (Catholic Church) நிர்வகிக்கும் பள்ளிக்கூடங்கள், கனடாவில், 1831 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. 1996 ஆம் ஆண்டில் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டு தொடங்கி 1970 ஆம் ஆண்டு வரையில், சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு குழந்தைகள், வலுக்கட்டாயமாக கிறிஸ்தவப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, தங்களுடைய தாய் மொழியில் பேச அனுமதி மறுக்கப்பட்டு, மீறினால் அடிக்கப்பட்டு, தவறான வார்த்தைகளால் திட்டப்பட்டு, அதன் மூலமாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர், என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

இது போன்ற பாதகச் செயல், “கலாச்சார இன அழிப்பு” தவிர வேறு இல்லை, எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அங்கு ஏற்கனவே படித்த பழைய பள்ளிக்கூட மாணவர்கள் கூறி வரும் செய்தி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருகில் உள்ள பழங்குடியின குழந்தைகளை கட்டாயமாக பள்ளிக் கூடத்தில் சேர்த்து, அவர்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றி, உடல், மன ரீதியாகவும் துன்புறுத்தி, அவர்களுடைய பழக்க வழக்கங்களை மாற்றி, உண்மையான வரலாற்றை மறந்து போகும் வகையில், அவர்களின் மனதையும், உடலையும் மாற்றியதாக, அங்கு படித்த பழைய மாணவர்கள், கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், குழந்தைகளை கடுமையான வகையில் வேலை வாங்கியதாகவும், பள்ளி நிர்வாகத்தினர் வைத்து இருக்கும் தொழிற்சாலைகளில், பெரியோர்களே செய்ய முடியாத அளவிற்கு உள்ள வேலைகளை, கட்டாயப் படுத்திக் குழந்தைகளை செய்ய வைத்ததால், அந்த குழந்தைகள் மனச்சோர்வு காரணமாக, நோய் வாய்ப்பட்டு உயிர் இழந்தனர் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

ஒரு சமுதாயத்தின் அடையாளத்தை முற்றிலுமாக அழித்து, தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப மாற்றி, புதிய அடையாளத்தை ஏற்படுத்துவது என்பது, கிறிஸ்தவர்களுக்கு வழக்கமான செயல்.

நமது தமிழகத்திலும் நிறைய அடையாளங்கள், மாற்றி அமைக்கப் பட்டு உள்ளது என்ற கருத்தும், நிலவி வருகின்றது. உதாரணத்திற்கு, “திருவள்ளுவர் கிறிஸ்தவரே” என்ற தோற்றத்தை ஏற்படுத்த, அதற்கான புத்தகத்தை அவர்கள் வெளியிட்டது, நமக்கு நன்கு நினைவில் இருக்கும்.

கிறிஸ்தவம் அமைதியை போதிக்கிறதா? என்ற கேள்விக்கு, நமக்கு வேறு வகையான பதிலே கிடைக்கின்றது. நாடு பிடிக்கும் ஆசையில், நமது நாட்டைப் போன்று பல நாடுகளை அடிமைப் படுத்தி, வ.உ.சி போன்ற பல லட்சக்கணக்கான தேச பக்தர்களை, துன்புறுத்தி, சாட்டையால் அடித்து, உடலை காயப்படுத்தி, துன்பம் இழைத்தது தான், நமக்கு நினைவுக்கு வருகின்றது. அந்த அளவிற்கு கொடுமை செய்த மதம்? எப்படி அமைதி மதமாக கருதப்படும்! என்ற கேள்விக்கு, யாரும் பதில் கூற வில்லையே!?

மன்னிப்பு கேட்பாரா கிறித்தவ மதம் போதகர் போப் பிரான்சிஸ்:

2017 ஆம் ஆண்டில், கனடா பிரதமரான ஜஸ்டின் துரூடோ (Justin Trudeau) அவர்கள், இந்த கொடூர சம்பவத்திற்காக, அவர்களின் மத குருவான போப் பிரான்சிஸ் அவர்கள், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்த துயர சம்பவத்திற்காக, தி யூனைடட் சர்ச் (The United Church), ஆங்கிலிகன் சர்ச் (Anglican Church) மற்றும் பிரஸ்பைடிரியன் சர்ச் (Presbyterian Church), 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில், மன்னிப்புக் கோரி இருந்தது.

தற்போது, ஜூன் 25 ஆம் தேதி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள், இந்த துயர சம்பவத்திற்காக, கிறிஸ்தவ மத குருவான போப் பிரான்சிஸ் அவர்கள், கனடாவில் வாழும் பூர்வகுடி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என, மீண்டும் ஒரு கோரிக்கை வைத்து இருந்தார்.

இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்ட, 130 பள்ளிக் கூடங்களின் கடந்த கால செயல்பாடுகள், முழுவதுமாக விசாரிக்கப் பட வேண்டும் என, அங்குள்ள நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

என்ன கண்டனம் தெரிவித்தார்கள்?:

எந்த உயிரும் விலை மதிக்க முடியாதது, மிகவும் முக்கியமானது. அப்பாவிக் குழந்தைகள் கடுமையான கொடுமைகள் அனுபவித்து, சித்திரவதை செய்யப் பட்டு, கொல்லப் பட்டதற்கு இங்கு உள்ள அரசியல்வாதிகள் யாரேனும் கண்டனம் தெரிவித்தார்களா?

தேச பக்தர்களின் கோரிக்கை:

சுதந்திரம் அடைந்து 75 வது வைர விழா ஆண்டை, நாம் கொண்டாட தயாராகும் இந்த நேரத்தில், நமது நாட்டை பிடிக்கும் எண்ணத்தில், நம்மை அடிமைப்படுத்தி, நமது மூதாதையர்களை துன்புறுத்தி, அச்சுறுத்திய பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள், தாங்கள் செய்த தவறுகளுக்கும், பாவத்திற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் என, இந்திய மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலைக்காக, பிரிட்டிஷ் பிரதமர் “தெரேசா மே” அவர்கள், ஏப்ரல் 10 2019 ஆம் ஆண்டு அன்று, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், “ஜாலியன் வாலாபாக் துயர சம்பவத்திற்காக,  வருத்தம் தெரிவிப்பதாக” கூறி இருந்தார்.

2013 ஆம் ஆண்டு இந்தியா வந்து இருந்த, அன்றைய இங்கிலாந்து பிரதமர், டேவிட் கேமரூன் அவர்கள், ஜாலியன் வாலாபாக் படுகொலையை, “ஆழ்ந்த வெட்கக் கேடான சம்பவம்” என குறிப்பிட்டு இருந்தார்.

அது மட்டும் போதாது. நமது நாட்டில், சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த, அனைத்து துயர சம்பவத்திற்காகவும் , பிரிட்டிஷ் அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேச பக்தர்கள் தொடர்ந்து எழுப்பி கொண்டு வருகின்றனர்.

  • அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe