ஒலிம்பிக்: வில் வித்தை காட்டி அடுத்த வாய்ப்புக்காக… தீபிகா குமாரி!

உலகம் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
olympic deepika kumari - 2026

– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

முதல் ஒலிம்பிக் போட்டி – வில்வித்தை
தீபிகா குமாரி 23.07.2021

இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி தனது டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வேட்டையை இன்று தொடங்கினார், இன்று, வெள்ளிக்கிழமை தரவரிசை சுற்றில் 663 புள்ளிகளுடன் 9 வது இடத்தை அவர் பிடித்தார்.

தீபிகா 663/720 புள்ளிகள் எடுத்தார், இரண்டாவது பாதியில் ஓரிரு குறைந்த மதிப்பெண்களால் தரவரிசையில் கீழிறங்கினார். இரண்டாவது பாதியில் தீபிகா குமாரி மூன்று 7 மற்றும் ஒரு 8 புள்ளிகளைப் பெற்றார். இது அவரை வரிசையில் கீழே தள்ளியது.

தீபிகா சீராகத் தொடங்கி முதல் பாதியின் முடிவில் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தார், ஆனால் விரைவில் இரண்டாவது சுற்றில் சறுக்கினார். தனிநபர் பெண்களின் தரவரிசை சுற்றில் ஆன் சான் – 680, ஜாங் மின்ஹீ – 677, சாயோங் காங்- 675 ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

உலக நம்பர் 1 வில்வித்தை வீராங்கனையான தீபிகா ஒரு கட்டத்தில் 14 வது இடத்திற்குச் சென்றுவிட்டார், ஆனால் முதல் பாதியின் முடிவில் லீடர் போர்டில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

இப்போது ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ள தீபிகா, ஜூலை 28 அன்று நடைபெறும் முதல் எலிமினேஷன் சுற்றில் பூட்டானில் இருந்து வந்துள்ள 56ஆவது இடத்தில் இருக்கும் பூ கர்மாவை எதிர்கொள்வார். ரியோ ஒலிம்பியனான பூ கர்மா உலக தரவரிசையில் 193ஆவது இடத்தில் உள்ளார்.

இந்திய ஆண்கள் அதானு தாஸ், தருந்தீப் ராய் மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகிய மூவரும் வில்வித்தை ஆண்கள் தரவரிசை சுற்றுக்கு களத்தில் இறங்க உள்ளனர்.

இன்று மாலை தொடக்க விழாப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.