அத்துமீறி மைதானத்தில் நுழைந்த யுடியூபர் கைது!

உலகம் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
daniel jarvis
daniel jarvis

டேனியல் ஜார்விஸ் மற்றும் பாதுகாப்பு மீறல்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் மதிய உணவுக்கு முந்தைய அமர்வின் போது ஓவல் அரங்கில் பாதுகாப்பை மீறி பிரபல யூடியூபர் டேனியல் ஜார்விஸ் மைதானத்தில் நுழைந்தார். அவர் இதற்காக தெற்கு லண்டன் போலீசாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

‘ஜார்வோ 69’ என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்திவரும் ஜார்விஸ், இந்திய கிரிக்கெட் வீரராக உடையணிந்துகொண்டு மைதானத்தில் நுழைவது இது மூன்றாம் முறை. வெள்ளிக்கிழமை இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) மோசமான பாதுகாப்பு ஏற்பாட்டை பயன்படுத்தி மூன்று ஆட்டங்களில் மூன்றாவது முறையாக அவர் மைதானத்தில் நுழைந்துள்ளார். இந்த விதி மீறல்களை இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

மைதானத்தில் நுழைந்ததோடு மட்டுமில்லாமல் அவர் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பெயர்ஸ்டோவின் மீது மோதிவிட்டார். எனவே தாக்குதல் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். யார்க்ஷயர் கவுண்டி அவருக்கு ஆயுள் முழுவது அவர் மைதானத்தில் நுழைய தடை விதிக்க முடிவு செய்தது.

ஜார்வோ லார்ட்ஸ் மைதானத்தில் முதலில் களமிறங்க முயற்சித்தார். பின்னர் லீட்ஸில் நுழைந்தார். நேற்று ஓவல் மைதானத்தில் உமேஷ் யாதவ் தனது பந்து வீச்சின் தொடக்கத்தில் இருந்தபோது ஜார்வோ வேகமாக உள்ளே ஓடிவந்தார். அவர் ஸ்ட்ரைக்கர் அல்லாத ஜானி பேர்ஸ்டோவுடன் மோதினார். அவர் மீண்டும் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.