தான் மட்டுமல்ல வீடும் மனைவி விருப்பப்படி சுழலுமாறு வடிவமைத்த காதல் கணவன்!

house
house

காதல் என்பது காலத்திற்குள் அடங்குவதும் இல்லை, நூற்றாண்டுகள் கடந்தாலும், மனிதர்கள் இறந்தாலும், வீழ்ந்தாலும், மாண்டாலும், வாழ்ந்தாலும் காதல் மட்டும் என்றும் என்றென்றும் உலகில் நிலைத்து வாழ்கிறது.

வடக்கு போஸ்னியாவில் ஒரு காதலன் தனது மனைவிக்காக சுழலும் வீடு ஒன்றை கட்டி பரிசளித்திருக்கிறார். இவர் தனது மனைவியுடன் இந்த காதல் சின்னத்தில் வாழ்ந்து வருகிறார். காதல் சுற்றும் அந்த சுழலும் வீட்டில் காதல் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இந்த செய்தி வைரலாகிறது.

இந்த காதல் மாளிகையை ஸ்ரபக் (Srbac) நகரில் 72 வயதான வோஜின் குசிக் வடிவமைத்தார். வீடு பச்சை முகப்புடனும், அதன் கூரை சிவப்பு உலோகத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஜன்னல்களுக்கு வெளியே பார்க்க விரும்பும் மனைவியின் ஆசைகளை பூர்த்தி செய்வதற்காக அன்புக் கணவன் அதை சுழல் வீடாக மாற்றியுள்ளார்.

“எனக்கு வயதான பிறகு, என் பிள்ளைகள் குடும்பத் தொழிலை செய்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் எனக்கு போதுமான நேரம் கிடைத்தது. அதனால், என் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு போதுமான நேரம் கிடைத்தது” என்று காதலுடன் சொல்கிறர் கணவர். மனைவி விரும்பும் போதெல்லாம் தனது வீட்டில் அறைகளின் நிலையை மாற்றிக் கொள்ள முடியும் என்று வோஜின் குசிக் (Vojin Kusic) கூறினார்.

வோஜின் குசிக் திருமணம் செய்துக் கொண்டபோது, அவர் தனக்கும் அவரது மனைவிக்கும் வழக்கமான வீட்டைக் கட்டினார், அந்த வீட்டில் தான் அவர்கள் தங்களது மூன்று குழந்தைகளை வளர்த்தனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

தங்கள் படுக்கையறைகளின் சூரிய வெளிச்சம் இருக்க வேண்டும் என்று மனைவி விரும்பியதால் அதற்கேற்ப வீட்டைக் கட்டினார்கள். ஆனால் வீட்டின் வரவேற்பரையில் இருந்து சாலையை பார்க்க முடியவில்லை. எனவே, மனைவியின் விருப்பப்படி குசிக் வீட்டை மீண்டும் மறுவடிவமைப்பு செய்தார்.

“எங்கள் இரண்டு படுக்கையறைகளுக்கு இடையில் உள்ள சுவரை வரவேற்பரையாக மாற்றி அனைத்து மின் நிறுவல்களையும் நகர்த்த வேண்டும். அது சவாலான வேலை. என் மனைவிக்காக அவள் விரும்பிவாறு வீட்டை மறுவடிவமைத்தேன்” என்று சொல்கிறார் 72 வயது காதல் கணவர்.

“இப்போது, எங்கள் வீடு சுழல்வதால், தேவையற்ற விருந்தினர்கள் வந்தால், வீட்டை சுழற்றி அவர்களுக்கு வாசல் தெரியாமல் செய்யலாம்” என்று குறும்புடன் சொல்லும் இந்த காதல் கணவர் கல்லூரிக்குச் செல்லாதவர் என்பது ஆச்சரியமானது.

மின்சார மோட்டார் மற்றும் ஒரு பழைய ராணுவப் போக்குவரத்து வாகனத்தின் சக்கரங்களைப் பயன்படுத்தி, தனது சுழலும் வீட்டை அவரே வடிவமைத்து கட்டியிருக்கிறார். காதல் என்ன செய்யும்? மனைவியானாலும் அவரை சுற்றி வரச் செய்யும், காதல் சின்னத்தை உருவாக்கவும் செய்யும் என்பது காலம் தாண்டி நிற்கும் உண்மை.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Entertainment News

Popular Categories