தாய்லாந்து குகையில் இருந்து இன்னும் 6 சிறுவர்கள் மீட்கப்படவேண்டும்!

தாய்லாந்து குகையில் இருந்து இன்னும் 6 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மீட்கப்பட வேண்டும்.

மீட்கப்பட்ட சிறார்கள் இப்போது மீட்பு குழு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

சியாங்ராய் மாகாணத்தின் மருத்துவ அதிகாரி பூன்தோங் பேசுகையில், “வெளியே கொண்டு வரப்பட்டுள்ள சிறுவர்கள் இப்போது மீட்பு குழு மையத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,” என கூறியுள்ளார்.

அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது, அவர்கள் சியாங்ராய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற சிறுவர்களை மீட்கும் பணி மிக தீவிரமாக நடைபெறுகிறது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குகைக்குள் இருளில் தவிக்கும் 12 சிறுவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் 12 சிறுவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீட்புக் குழுவின் தலைவர் நரோங்சாக் ஒசோட்டான்கோர்ன் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கடந்த 23-ஆம் தேதி, 16 வயதுக்கு உட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும் தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்கு சென்றனர். அப்போது திடீரென மழை பெய்து குகை நுழைவுவாயிலில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இவர்கள் வெளியே வர முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். அவர்களின் நிலைமை என்ன ஆனது என தெரியாமல் நாடே பதற்றத்தில் ஆழ்ந்தது.

ஆனால் 9 நாட்களுக்கு பிறகு அவர்கள் குகைக்குள்ளே பல கிலோ மீட்டர் தள்ளி ஒரு சின்ன திட்டின்மீது தவித்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவர்களில் பலருக்கு நீச்சல் தெரியாததால் மீட்புப் பணி தாமதமானது.

தாய்லாந்து ராணுவமும், கடற்படையும் இவர்களை மீட்கும் பணியை தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை, வடியாத வெள்ளம், சேறு, சகதி ஆகியவை மீட்பு பணிகளில் சிக்கலை ஏற்படுத்தின. அதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவிலான செய்தியாக மாறியது.

பல நாடுகளை சார்ந்த அனுபவம் வாய்ந்த ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இதனிடையே, மீண்டும் மழை பெய்தால் மீட்புப் பணிகள் கடும் பின்னடைவை சந்திக்கும் என்ற சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அடுத்த மூன்று நாட்கள் பருவநிலை சாதகமாக இருப்பதாக மீட்பு குழுவின் தலைவர் நரோங்சாக் கூறியுள்ளார்.

இன்றே மீட்பு பணிகளை மேற்கொள்ளும் நாள் என கூறியுள்ள அவர் எந்த சவாலையும் சமாளிக்க சிறுவர்கள் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். முதல் சிறுவன் வெளியே வருவதற்கே சுமார் 11 மணி நேரம் ஆகும் என அவர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக அந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த 1000ற்கும் அதிகமான செய்தியாளர்களை, மீட்புப் பணிக்கு இடையூறு விளைவிக்காமல் விலகிச் செல்லும்படி அரசு அறிவுறுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories