இஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு

Published:

israel - 2026

இஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய துருக்கி வெளியுறவு துறை அமைச்சர், இந்த சட்டம், சர்வதேச சட்ட விதிகளை மீறியுள்ளதோடு, இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட கொண்டு வந்துள்ளதற்கு எதிராக சர்வதேச சமூகம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து இஸ்ரேல் யூத நாடானது, இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8 மணி நேர விவாதத்துக்கு பின்னர் ஓட்டெடுப்பு நடந்தது. 62 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 55 பேர் எதிராக வாக்களித்தனர்.

இஸ்ரேல் மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் இஸ்ரேலிய அரபு மக்கள் ஆவர். இப்போது இஸ்ரேல், யூத நாடு ஆகி விட்டதால் அரபி மொழிக்கான அந்தஸ்து குறைந்து விடும் என சொல்லப்படுகிறது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img