கடந்த இரு வாரங்களுக்கு முன் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து பல்வேறு தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த வண்ணம் உள்ளன!
இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இலங்கையில் கிறிஸ்தவர்களையும் சர்ச்சுகளையும் குறிவைத்து தாக்கப்பட்ட இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல் இடம்பெற்ற நான்காவது நாளில் தற்கொலை செய்து கொண்டவர்கள் யார்? தற்கொலை குண்டு வைத்தவர்கள் யார் என்பது தெரியவந்தது.
இவர்களில் சிலரது புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர் இந்த புகைப் படங்களில் புலஸ்தினி மகேந்திரன் என்ற தமிழ் பெண் ஒருவரின் பெயரும் இடம் பெற்றிருந்தது! இது குறித்து இலங்கை ஊடகம் ஒன்று சிறப்பு ஆய்வினை நடத்தியது!
அதில் இந்தப் பெண் மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது! இது குறித்து அந்தப் பெண்ணின் தாயாரிடம் அந்த ஊடகம் கருத்து கேட்டது. அப்போது அவர் எனது மகள் கல்வியில் சிறந்து விளங்கினார். நன்கு படித்தார். நல்ல தரத்துடன் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்நிலையில் எனது மகள் இஸ்லாமிய இளைஞர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு மதம் மாற்றம் செய்யப்பட்டார்… அவரைக் காணவில்லை என்று போலீஸிலும் புகார் அளித்தோம் என்று கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேத்தாத்தீவு பகுதியில் இந்த புலஸ்தினி மகேந்திரனின் இளமைக்கால வீடு இருக்கிறது. அவரது தாயின் பெயர் கவிதா. தந்தையின் பெயர் மகேந்திரன். மிகச்சிறந்த படிப்பாளியாகவும் கல்வியில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் இருந்த தனது மகளை ஹஸ்திம் என்ற இஸ்லாமிய இளைஞர் கடத்திச் சென்றதாக கவிதா தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் தனது மகள் பெயர் இடம்பெற்றது குறித்து கடும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்த கவிதா, தாங்கள் மிகுந்த துக்கத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
தனது மகள் நல்ல ஹிந்துப் பெண்ணாக இருந்தார் என்றும், அவர் இஸ்லாமிய இளைஞரால் இஸ்லாத்துக்கு மாற்றப் பட்டு, கடத்தப் பட்ட பின்னர், நடந்த சம்பவங்கள் குறித்தும் புலஸ்தினியின் தாயார் கவிதா கண்ணீருடன் கூறியுள்ளார்!
கடந்த 21ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்! இதில் ஹஸ்திம் என்ற இந்த இஸ்லாமிய இளைஞர்தான் நீர்கொழும்புவில் நடைபெற்ற சர்ச் குண்டுவெடிப்பின் தற்கொலை பயங்கரவாதி என்று கண்டறியப் பட்டது.
குறிப்பாக, ஐ.எஸ்., இயக்கத்தின் தொடர்புள்ள இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களால் மூளைச் சலவை செய்யப் பட்ட இஸ்லாமிய இளைஞர்கள், வேற்று இன மதப் பெண்களை லவ் ஜிஹாத் என்ற வகையில் இஸ்லாத்துக்கு மதம் மாற்றி, ஐ.எஸ். இயக்கத்தில் ஈடுபடுத்துகின்றனர். தொடர்ந்து, அவர்கள் தற்கொலை பயங்கரவாதியாக மாற்றி விடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இது இந்து பெண்களுக்கான எச்சரிக்கை மட்டுமல்ல, இஸ்லாமிய இளைஞர்களுடன் இந்து மத பெண்கள் பழகுவதை கண்காணித்து தடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், இஸ்லாத்துக்கு மதம் மாறும் பெண்களால் அவர்களின் வீட்டுக்கு மட்டும் கேடு இல்லை, நாட்டுக்கே கேடு என்றும் எச்சரிக்கின்றனர் இந்த சம்பவங்களால் பாதிக்கப் பட்ட குடும்பத்தினர்! அதற்கு இந்த கவிதா என்ற இந்து குடும்பப் பெண்மணியின் பேட்டி ஓர் உதாரணம்!
Source: IBC Tamil