இரு வாரங்களுக்குப் பின்… இலங்கை கிறிஸ்துவ சர்ச்சுகளில் மீண்டும் ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டங்கள்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

christian church colomboo2 - 2026தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து மூன்று வாரங்கள் ஆன நிலையில், மீண்டும் இன்று இலங்கையில் உள்ள சர்ச்சுகளில் ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டங்கள் நடந்தன.

கொழும்பு உயர் மறை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கத்தோலிக்க சர்ச்களிலும் திருப்பலி கொடுக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு இடையே ஞாயிற்றுக் கிழமை இன்று கத்தோலிக்க சர்ச்சுகளில் திருப்பலி கொடுக்கப்பட்டதாக கொழும்பு பேராயரின் ஊடகப் பிரிவு செய்தி தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படையினர் அனைத்து கிறிஸ்துவ சர்ச்களுக்கு அருகிலும் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். இந்நிலையில், பெரும்பாலான மக்கள் இன்றைய திருப்பலிகளில் கலந்துகொண்டனர்.christian church colomboo - 2026

முன்னதாக, கடந்த ஏப்.21 ஆம் தேதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துவ சர்ச்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர்.

மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டதால், கிறிஸ்துவ சர்ச்சுகள் மூடப் பட்டன. இந்நிலையில், இரு வாரங்கள் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப் படாமல்… இன்று மீண்டும் சர்ச்சுகள் திறக்கப் பட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.