குழந்தையை அடித்துச் சென்ற அலை ! காப்பாற்ற கடலில் குதித்த தாய் !

Published:

sea - 2026கொழும்பு சிலாபம் பகுதியில் ஒரு வயது குழந்தை ஒன்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்டியில் இருந்து சுற்றுலா சென்றிருந்த  தாய் ஒருவரும் அவருடைய மூன்று குழந்தைகளும் குளிக்க சென்றுள்ளனர். ஒரு வயது இரண்டு மாதங்கள் ஆன குழந்தை கடற்கரையில் விளையாடி கொண்டிருந்தது. அப்போழுது விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை  அலை இழுத்து சென்றது. இதனைக் கண்ட  தாய் குழந்தையை காப்பாற்ற தன்  மற்ற குழந்தைகளுடன்  முயன்றுள்ளார். kadalil muzhki 1 - 2026இதனால் அவா்கள் அனைவரும் நீாில் மூழ்கிய நிலையில் அப்பகுதியில் இருந்த சிலர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். எனினும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டிருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மற்ற குழந்தைகள் இருவரும் சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img