நாளை குருவாயூர் கோவிலுக்கு வருகிறார் இலங்கைப் பிரதமர்

திருவனந்தபுரம்: கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வருகிறார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது குடும்பத்தினரும் உச்சபூஜை முடிந்த பின்னர் ஸ்வாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறும் முன்பு ரணில் விக்கிரமசிங்க குருவாயூர் வந்து சென்றார். இப்போது அவர் இலங்கையில் பிரதமராக உள்ளார். பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக குருவாயூருக்கு அவர் வருகிறார். ரணில் வருகையையொட்டி அங்கே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.