இன்னும் ஒரே வாரம்… அதற்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு உத்தரவு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

03 July19 Parliment - 2026

இன்னும் 7 நாட்களில் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று 200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்பி-க்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்று மக்களவை வீட்டு வசதிக் குழு திங்கள்கிழமை இன்று உத்தரவிட்டுள்ளது.

200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள், அரசு பங்களாவை இதுவரை காலி செய்யவில்லை. இந்நிலையில், மக்களவை வீட்டு வசதிக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் அரசு பங்களாக்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று முன்னாள் எம்பி-க்களை அது கேட்டுக்கொண்டது.

மக்களவை வீட்டு வசதிக் குழுத் தலைவர் சி.ஆர். பாட்டீல் இன்று செய்தி நிறுவனம் ஒன்றில் தகவல் தெரிவிக்கையில்…

இன்று நடைபெற்ற வீட்டு வசதிக் குழுக் கூட்டத்தில், இன்னும் ஒரு வார காலத்துக்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்று முன்னாள் எம்பி-க்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் மின்சாரம், தண்ணீர், கேஸ் இணைப்புகள் உள்ளிட்ட அனைத்தும் துண்டிக்கப்படும்! இத்தகைய முடிவு இன்று இந்தக் கூட்டத்தில் எடுக்கப் பட்டது. இதற்கு எந்தவொரு எம்பியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்றார்.

200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்பி-க்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பதால், புதிதாக தேர்வான எம்பி-க்கள் தற்காலிக இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.