மருந்தகத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

Published:

lady susid 2 1
lady susid 2 1

ராமநாதபுரத்தில் மருத்துவமனையில் பணிபுரிந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூரை அடுத்துள்ள சீனாக்குடி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் மனிஷா(19) அரண்மனை அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பணி புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனிஷா மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனிஷா வழக்கம்போல நேற்று வேலைக்கு சென்ற மனிஷா மருத்துவமனை மாடிக்கு சென்று அவர் அணிந்திருந்த துப்பட்டா மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அங்கு வந்த மனிஷாவின் பெற்றோர் அவரது உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img