வாரியார் சுவாமிகளின் பிறந்த தினத்தில்… இதப் படிங்க..!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
variarswami - 2026

மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் 
பயனுள்ளதாக இருக்க வேண்டும். 

மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது. 

ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால் துயரம் வந்து சேரும். 

நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன் எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.

தாட்சண்யம் – பார்த்துக் கெட்டது பிள்ளை
கவனமாக – பார்க்காது கெட்டது பயிர்!

குச்சி – இட்டுக் கெட்டது காது!
மை – இடாது கெட்டது கண்!

கோள் – கேட்டுக் கேட்டது குடும்பம்!
திருப்பி – கேட்காது கெட்டது கடன்!

அதிகமாக – உண்டு கெட்டது வயிறு
உறவினர் வீட்டுக்குச் சென்று – உண்ணாது கெட்டது உறவு!

* கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.. *
( 25.08.1906 )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.