கண்ட கண்ட பத்திரிகைக்கு பதில் சொல்ல முடியாது: முரசொலியைப் பார்த்து விஜயகாந்த் மகன் சாடல்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
vijayakanth
vijayakanth

அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அண்ணாசிலையில் உள்ள அவரது சிலைக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மாற்றத்தை விரும்பினால் மூன்றாவது அணி அமைக்கவும் தயார் என கூறினார்.

அப்போது, அற்ப தொகைக்காக அரிய பொருளை அடகு வைப்பது போல நீங்கள் இந்த கட்சியை அடகு பொருளாக்கி விட்டீர்கள் என்று முரசொலி நாளிதழின் நிருபர் கேள்வி எழுப்பினார்.

Vijaya-Prabhakaran
Vijaya-Prabhakaran

அதற்கு கடுப்பான விஜயபிரபாகரன், கண்ட கண்ட பத்திரிகைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சசிகலாவுக்கு தாமும், தனது தாயாரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க செல்லுமா என்கிற கேள்விக்கு மக்கள் யார் நல்லது செய்வார்கள் என விரும்புவார்களோ அந்த கூட்டணிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.