சந்தேகத்தால் வந்த ஆத்திரம்! யோவானை வெட்டிக் கொன்ற ஏசான்!

Published:

murder-2-1
murder-2-1

தம்பி மனைவிக்கு பிறந்த நாள் அன்று கேக் வெட்டி கொண்டாடிய அண்ணனை சரமாரியாக வெட்டிய தம்பி வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் குமாரச்சேரி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் யோவான் (25). இவரது சகோதரர் ஏசான் (22). அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்கள். மதுவுக்கும், கஞ்சாவிற்கும் அடிமையான ஏசானுக்கு நெல்லூரில் உள்ள துணிக்கடையில் சில வருடங்களுக்கு முன்பு வேலை செய்த போது ஒரு பெண்ணை காதலித்து இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தம்பதியர் இருவரும் நெல்லையில் வீடு எடுத்து தங்கி வந்தனர். அண்ணன் யோவான் பெயிண்டராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் குமாரச்சேரிக்கு வந்து தங்கியுள்ளார் ஏசான். இந்நிலையில் ஏசானின் மனைவிக்கு பிறந்த நாள் வந்துள்ளது. இதற்காக யோவான் தம்பி மனைவியின் ஊருக்கு சென்று கேக் வாங்கி வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இதனால் ஏசானுக்கு சந்தேகம் ஏற்படவே நேற்று முன்தினம் யோவான் வீட்டில் இருக்கும் போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஏசான் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

இதில் ரத்த வெள்ளத்தில் யோவான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தியதில் ஏசான் முழு விவரத்தையும் வாக்குமூலமாக அளித்ததால் இந்த நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img