திருமணமாகி பதினைந்தே நாட்கள்.. கல்லூரி பேராசிரியர் மர்ம மரணம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
marriage
marriage

மேற்கு வங்க மாநிலத்தில் அந்திசக் கிராமத்தை சேர்ந்த பிரதீம் என்பவர் கல்லூரி பேராசிரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் பிரகத்தி என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் புதுமாப்பிள்ளை பிரதீமுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதீம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் அவரின் மரணத்தில் பிரதீமின் பெற்றோருக்கு சந்தேகம் வந்துள்ளது.

deadbody
deadbody

இதனையடுத்து பிரதீமின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், பிரதீம் மனைவி பிரகத்தி நாங்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லை, அடக்கமாக உடைகளை அணியாமல் மாடர்னாக உடை அணியவே விரும்பினார். கிராமத்தில் வளர்ந்த பிரதீமுக்கு மனைவியின் நடவடிக்கைகள் அதிருப்தியை கொடுத்தது.

இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதையடுத்தே மர்மமான முறையில் பிரதீம் இறந்திருக்கிறார். அவரை பிரகத்தி தான் கொலை செய்திருக்கிறார் என கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.