
கொண்டைக்கடலை பிரியாணி
தேவையான பொருட்கள்
- பாசுமதி அரிசி – 1 கப்
- கொண்டைக்கடலை – 1/2 கப்
- வெங்காயம் – 1 [பெரிது]
- தக்காளி – 1 [சின்னது]
- உப்பு
- மஞ்சள் தூள் – சிறிது
அரைக்க:
- தக்காளி – 1 [சின்னது]
- இஞ்சி, பூண்டு – சிறிது
- பச்சை மிளகாய் – 2
- தேங்காய் துருவல் – 1 மேஜைக்கரண்டி
- முந்திரி – 5
- கொத்தமல்லி இலை – சிறிது
தாளிக்க:
- நெய் + எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
- பட்டை – 1 துண்டு
- லவங்கம் – 2
- ஏலக்காய் – 1
- பிரியாணி இலை – 1/2
செய்முறை
அரிசியை கழுவி ஊற வைக்கவும். கொண்டைக்கடலையை முன் நாளே ஊற வைத்து லேசாக உப்பு சேர்த்து வேக வைத்து வைக்கவும்.
அரைக்க கொடுத்தவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இப்போது அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது அரிசியை நீர் இல்லாமல் வடித்து சேர்த்து பிரட்டவும்.
அரிசி நன்றாக கலந்த பின் 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் சிறுந்தீயில் வைத்து மூடி வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து மூடி தம் போட்டு வேக விடவும்.
சுவையான கொண்டைக்கடலை பிரியாணி தயார்.