நடிக்க வாய்ப்பு கொடுங்கன்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்து… ‘சூப்பர் ஸ்டார்’ ஆனவர்!

அடடே... அப்படியா? சினி நியூஸ் சினிமா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
Pathinettam Padi4 - 2026

சினிமா துறையில் இன்று நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் அதற்காக முட்டி மோதி அலைந்து திரிந்து ரொம்பவே கஷ்டப் பட வேண்டும். பலரும் புகைப்பட ஆல்பத்தை கையில் வைத்துக் கொண்டு… கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி சிரமப் பட்டிருப்பார்கள்.

இன்று தன்னைப் பற்றிய விளம்பரத்தை கொண்டு செல்ல பிஆர்ஓ.,க்கள் அதிகம் பேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலம் ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தி அதை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்து உலவ விட்டு உலா வருவது நடிகைகளின் பழக்கம்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு, தின, வார, மாத பத்திரிகைகளின் நடுப்பக்கங்கள் கவர்ச்சிப் பக்கங்களுக்காகவே பிரிக்கப்படும். அவற்றின் மூலம் சிலருக்கு வாய்ப்புகளும் கிடைத்திருக்கின்றன.

அதை விட ஒரு படி மேலே போய் இப்போது சமூக வலைத்தளங்கள் நடிகர், நடிகைகளுக்கு கை கொடுக்கின்றன. பேஸ்புக், இன்ஸ்டாக்ராம், டிவிட்டர் என தங்கள் கவர்ச்சிப் படங்களை தாங்களே உலவ விட்டு, ரசிகர்கள் மட்டுமல்லாது, இயக்குனர், தயாரிப்ப்பாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.

இவை எல்லாம் இல்லாத காலத்தில், ஒரு நடிகர் தன்னைப் பற்றிய விளம்பரத்தை ஒரு பத்திரிகையில் கொடுத்து, கவனத்தை ஈர்த்து, வாய்ப்பு பெற்று இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார் என்றால்…

அவர் – முகமதுகுட்டி @ மம்முட்டி..!

mamutty - 2026

இந்தச் செய்தியைப் படிங்க…

கல்லூரியில் “பெஸ்ட் ஆக்டர்” ஆக இருந்த பி. ஐ. முகமதுகுட்டி சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார். சட்டம் படித்த இவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்குரிய அழகு உண்டு. புதுமுகங்களைத்தேடும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கவனத்தில் கொள்ளவும்.

  • பி. ஐ. முகமது குட்டி,
    அட்வகேட், மஞ்சேரி.

நடிகராவதற்கு முன்பு 1979 ல் மம்முட்டி தன்னைப்பற்றி கொடுத்திருந்த பத்திரிகை விளம்பரம் இது…

சேட்டன்றே பெல்பாட்டம் பேன்ட் வளர நன்னாயிட்டு உண்டு அல்லே..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.