வாராணசி : சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறையாக, நாடு முழுவதும் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுவதாக பிரதமர் மோடி கூறினார். வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் முன் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர், முதல் முறையாக நாடு முழுவதும் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுவதைப் பார்க்கிறேன். காஷ்மீர் முதல் குமரி வரை காசி காட் முதல் போர்பந்தர் வரை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஆதரவாக இருக்கின்றனர்… என்று கூறியமோடி, “மோடி ஆட்சி…” என்று சொன்னவுடன், கூடியிருந்த கட்சித் தொண்டர்கள், “மீண்டும் வேண்டும்” என்று முழக்கமிட்டனர்.
தொடர்ந்து பேசிய மோடி, எந்த ஒரு காரியகர்த்தரும், நிர்வாகியும் என்னால் பாதிக்கப் பட்டதில்லை. அவர்களுக்காகவே நான் இருக்கிறேன். நாம், இந்த நாட்டில் நல்லாட்சிக்காக நேர்மையுடன் கடினமாக உழைத்துள்ளோம். நான் வெற்றி பெறுகிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை. ஜனநாயகம் வெல்ல வேண்டும்.
வெயில் சுட்டெரிக்கும் இந்த மே மாதத்தில் அனைத்தையும் உடைத்தெறிந்து ஓட்டுப்பதிவில் புதிய சாதனை படைத்து உலகிற்கு காட்டுவோம். முந்தைய தேர்தல்களின் அனைத்து சாதனைகளையும் முறியடிப்போம்.
ஒவ்வொரு 100 ஆண்களின் ஓட்டுக்கு இணையாக 105 பெண்கள் ஓட்டளிக்க வேண்டும். மோடி ஆட்சி மீண்டும் வர வேண்டும் என மக்கள் தங்கள் மனங்களில் முடிவு செய்து விட்டார்கள்; அவர்கள் விரும்புகிறார்கள். வாராணசியில் ஏற்கெனவே நாம் வென்று விட்டோம். அதற்கு நேற்று நடந்த பேரணியே உதாரணம். வாராணசி நேற்றே எனக்கு தனது ஆசியை தந்து விட்டது என்று பேசினார் மோடி.
More than me working for Kashi’s change, Kashi has changed me! Here is how… pic.twitter.com/XTiZBMYb6P
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 26, 2019




