முகநூலில் ஆபாசபடம் அனுப்பி படுக்கைக்கு அழைத்த இசையமைப்பாளர் கைது!

அடடே... அப்படியா? இந்தியா கிரைம் நியூஸ்
phone - 2026

ஃபேஸ்புக்கில் நட்பாக இருந்த இளம்பெண் ஒருவருக்கு தனது நிர்வாணப் படங்களைத் தொடர்ந்து அனுப்பி படுக்கைக்கும் அழைத்த போலி இசையமைப்பாளர் ஒருவரை பெங்களூரு கவல்துறையினர் கைது செய்தனர்.

இன்றைய சூழலில் பெண்களுக்கு கையிலே ஆபத்து இருக்கிறது சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வீடு தேடி வருகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் இது

பெங்களூருவில் உள்ள கே.எஸ்.லே அவுட்டில் வசிப்பவர் முரளிதர் ராவ். தனது முகநூல் பக்கத்தில் கன்னட திரையுலக நட்சத்திரங்கள் பலருடன் எடுத்துக்கொண்ட படத்தைத் தொடர்ந்து பகிர்ந்து வந்திருக்கிறார். தனக்கு கன்னட திரையுலகில் உள்ள நடிகர்கள், இயக்குநர்கள் மிகவும் நெருக்கம் இருப்பதாகவும் தன்னால் பட வாய்ப்புகள் வாங்கித் தரமுடியும் என்றும் முகநூல் மூலமாக தொடர்ந்து விளம்பரப் படுத்தியிருக்கிறார். இதை பார்த்து இவர் மீது நம்பிக்கை கொண்டு பல பெண்கள் இவரை அணுகி உள்ளனர்.

அவரது பதிவுகளை நம்பிய இளம்பெண் ஒருவர் தனக்கு நடிப்பு ஆசையிருக்கிறது. படங்களில் வாய்ப்பு வாங்கித் தரமுடியுமா எனக் கேட்கவுமே முரளியின் சுயரூபம் மெல்ல வெளிப்படத் துவங்கியது.

கன்னடத் திரையுலகில் தான் மிகவும் செல்வாக்கு மிக்க ஆள் என்று அந்தப் பெண்ணிடம் காட்டிக்கொள்ள ஆரம்பித்த அவர் அப்பெண்ணுக்கு ஆபாச மெஸேஜ்களையும் செக்ஸ் துணுக்குகளையும் பகிரத் தொடங்கியுள்ளார்.

criam 2 - 2026

இதை கண்டு மன ரீதியாக பாதிக்கப்பட்டார் அந்த பெண். அத்துடன் நில்லாமல் தனது இல்லத்துக்கு ஒரு ஃபோட்டோ ஷூட்டுக்காக வரவேண்டியிருக்கும் என்றும் அது மட்டுமின்றி தன்னோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் தான் பெரிய வாய்ப்புகள் வாங்கித்தர முடியும் என்றும் நிபந்தனை விதித்திருக்கிறார். அதற்கு அப்பெண் ஏதும் பதில் அளிக்காதைத் தொடர்ந்து தனது முழு நிர்வாணப் படங்களை அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு தரத் துவங்கியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவரது இம்சைகள் அதிகமாகவே அந்த இளம்பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அத்தனை ஆதாரங்களையும் ஒப்படைத்து புகார் செய்தார். உடனே அந்த காமுக இசையமைப்பாளரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 354ஏ (பாலியல் துன்புறுத்தல்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவரால் வேறு சில பெண்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.