60 வயது பெண்மணி.. ஃபேஸ்புக் நட்பு.. டாக்டர் என ஏமாற்றி பணம் பறிப்பு!

இந்தியா சற்றுமுன்
facebook - 2026

ஒரு 60 வயதான பெண்ணை புது டெக்னிக்கில் ஏமாற்றி நாலு கோடி பணம் பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர் .

மகாராஷ்டிராவின் புனேவில் ஒரு 60 வயதான கோடீஸ்வரி பெண்மணி தனியாக வசித்து வந்தார் .அவர் சோசியல் மீடியாவில் எந்நேரமும் பொழுதை போக்கி வந்தார்.

இந்நிலையில் அந்த பெண் தனியாக வசிப்பதையும் ,அவரிடம் கோடிக்கணக்கில் பணமிருப்பதையும் தெரிந்து கொண்ட சிலர் அவரிடம் பணத்தை ஆட்டைய போட திட்டமிட்டனர் .

அதன் படி அந்த பெண்ணிடம் லண்டன் டாக்டர் என்று கூறிக்கொண்டு ஒருவர் சோசியல் மீடியாவில் நட்பு கொண்டார். அதன் பிறகு அந்த லண்டன் நபரிடம் அந்த பெண் பலமுறை சாட் செய்தார்.

அதன் பிறகு அந்த நபர் அந்த பெண்ணுக்கு சில நகைகள் மற்றும் செல்போன் போன்றவற்றை பரிசாக லண்டனிலிருந்து அனுப்பியுள்ளதாக கூறினார்.

மேலும் அந்த பார்சலை டூட்டி கட்டி பெற்றுக்கொள்ளுமாறு கூறினார் .அதன் பிறகு சில நாட்களுக்கு பிற அந்த பெண்ணுக்கு விமானநிலைய சுங்க துறையிலிருந்து பேசுவதாக கூறி ஒருவர் பேசினார்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

அப்போது அவர் அந்த பெண்ணிடம் தங்களுக்கு லண்டனிலிருந்த்து பார்சல் வந்திருப்பதாகவும் அதை பெற்றுக்கொள்ள டூட்டி கட்டவேண்டுமென்று கூறி பல தவணைகளில் 3.9 கோடி ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.

அந்த பணம் 207 தடவை பல அக்கௌண்டுகளில் அந்த பெண்ணை மிரட்டி வாங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த பெண் அவர்களின் டார்ச்சர் பொறுக்க முடியாமல் போலீசில் புகார் கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர்களை தேடி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.