அக்.04: தமிழகத்தில் இன்று… 5,489 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona-image
corona-image

தமிழகத்தில் மேலும் 5,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத்துறை அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

 தமிழகத்தில் ஒரே நாளில் 5489 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு 6,19,996 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,348 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,72,773 ஆக உயர்வு அடைந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபட்டு, மேலும் 5558 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதை அடுத்து  தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,64,092 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 9,784ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப் பட்டோர் நிலவரம்:

district-wise-corona-details-oct-04
district-wise-corona-details-oct-04

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.