வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய…. தேதி நீட்டிப்பு!

Published:

16 July15 Income - 2026

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

2018-19ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் சென்ற ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியது.

ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பைத் தாண்டும் அனைவரும் கட்டாயமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

வரி ஆதாயத்திற்காக வீட்டுக்கடன், சேமிப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமான வரி உச்சவரம்புக்கு குறைவாக இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அ

2018-19ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கு சம்பளம், மற்ற வருவாய், வீடு, விவசாயத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் என ஆண்டு வருவாய் 50 லட்சத்திற்குள் உள்ள தனிநபர், ITR 1 என்ற படிவம் மூலம் வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்‌.

www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

இந்தக் கணக்கை தாக்கல் செய்ய வரும் 31ஆம் தேதி கடைசி தேதியாக இருந்தது. இந்நிலையில், வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 31ஆக மத்திய நேரடி வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது. அ

பொது மக்கள் தங்கள் வருமாவரி கணக்கை ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ

காலதாமதமாக‌ வருமான கணக்குத் தாக்கல் செய்பவர்களுக்கு, அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img