மோடி பேர சொன்னாலே ச்சும்ம்மா உதறுதுல்ல..! மைக் ஷாக் வாங்கி அதிர்ந்த பாகிஸ்தான் அமைச்சர்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
pakistan railway minister - 2026

மோடி பேர சொன்னாலே ச்சும்மா அதிருதுல்ல என சொல்லும் வகையில், மோடியைக் குறித்து எகத்தாளமாகப் பேசிக் கொண்டிருந்த போது, மைக்கில் ஷாக் வாங்கினார் பாகிஸ்தான் அமைச்சர்.

பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக அவர் பேசினார்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு முழுமையான போர் “அக்டோபர் அல்லது அடுத்த மாதத்தில்” வரும் என்றார்.

அவர் பாரதப் பிரதமர் மோடியின் பெயரைச் சொல்லி இப்படிக் கூறிய அடுத்த நொடி, திடீரென அவர் கையில் பிடித்திருந்த மைக்கில் மின்சாரம் பாய்ந்து ‘ஷாக்’ அடித்தது. ஓரிரு நொடிகள்… ஊஃப்… என கையை உதறிப் பதறினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு… ஒன்றும் இல்லை என மழுப்பினார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் இதனை கிண்டல் அடித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.