இஸ்ரோவுக்கும், பிரதமருக்கும் பாராட்டு! பாகிஸ்தான் விண்வெளி வீராங்கனை!

அடடே... அப்படியா? உலகம் தொழில்நுட்பம் பொது தகவல்கள்
namira salim 2 - 2026

கராச்சி: சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்க முயற்சி செய்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முயற்சிக்கு உலகம் முழுவதில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான நமீரா சலிம் சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியதற்காக இந்தியாவுக்கும் இஸ்ரோவுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கராச்சியைச் சேந்த இணையதள அறிவியல் இதழுக்கு பேட்டி அளித்த விண்வெளி வீராங்கனை நமீரா சலிம், “நிலாவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக மென்மையாக இறக்குவதற்கான வரலாற்று முயற்சியில் ஈடுபட்ட இந்தியாவுக்கு இஸ்ரோவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

namira salim 1 1 - 2026

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நிலவை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான் 2 பணி என்பது உண்மையில் தெற்காசியாவின் மாபெரும் பாய்ச்சலாகும். இது தெற்காசிய பிராந்தியத்தை மட்டுமல்ல உலகம் முழுவதும் விண்வெளி பணிகளை பெருமைப்படுத்துகிறது.

தற்போது தெற்காசியா பிராந்தியத்தில் விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. விண்வெளி பணியை எந்த நாடு வழி நடத்துக்கிறது என்பது முக்கியமல்ல. பூமியில் நம்மை அனைத்து அரசியல் எல்லைகளும் பிரிக்கும் நிலையில், அதை கடந்து விண்வெளி நம்மை இணைக்கிறது” என கூறியுள்ளார்.

தனது ட்விட்ரிலும் இந்தியாவை கண்டு பெருமையடைவதாகக் கூறியுள்ளார். வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.