whatsapp - 2026

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பதிப்பில் படிக்காத சேட்டிங் ஃபில்டர் எனற் புதிய அம்சத்தில் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.

2.2221.1 பதிப்பில் வாட்ஸ்அப் சோதனை செய்து வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த புதிய அம்சமானது “படிக்காத செய்திகளை வரிசைப்படுத்தி படிக்க அனுமதிக்கும்” என தெரிவிக்கப்படுகிறது.

வாட்ஸ்அப் பயன்பாட்டில் பயனர்களின் தேவையறிந்து தொடர்ந்து புதுப்புது அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் தளத்தில் அறிமுகம் செய்யப்படும் அம்சங்கள் முதற்கட்டமாக அதன் பீட்டா பதிப்பில் சோதிக்கப்படும்.

இதன்மூலம் அம்சங்களில் குறைநிறைகள் கண்டறியப்பட்டு மேம்படுத்தி அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும். அதன்படி தற்போது வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புது அம்சம் ஒன்று சோதனை செய்வது கண்டறியப்பட்டு இருக்கிறது.

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பதிப்பில் படிக்கப்படாத மெசேஜ் ஃபில்டர் அம்சத்தை சோதனை செய்வது கண்டறியப்பட்டு இருக்கிறது.

புதிய அம்சமானது பயனர்கள் படிக்காத மெசேஜ்களை ஒரு வரிசையில் படிக்க அனுமதிக்கும் என கூறப்படுகிறது. தேடல் (Search) அம்சத்துக்கு அடுத்ததாக இந்த ஃபில்டர் அம்சம் இடம்பெறும் என கூறப்படுகிறது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இதுகுறித்த XDA டெவலப்பர்கள் வெளியிட்ட தகவலின்படி, டெஸ்க்டாப் பயனர்களுக்கான புதிய சேட்டிங் ஃபில்டரில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பயனர்களில் புதிய அம்சம் 2.2221.1 பதிப்பில் இணையதளம் கண்டறிந்துள்ளது.

XDA-ல் பகிர்ந்த ஸ்க்ரீன்ஷாட் படி, தேடல் தேர்வுக்கு அடுத்ததாக இந்த ஃபில்டர் பட்டன் இடம்பெறும் என கூறப்படுகிறது. நீங்கள் இந்த ஃபில்டர் அம்சத்தை தேர்ந்தெடுக்கும் போது வாட்ஸ்அப் நீங்கள் படித்த அனைத்து மெசேஜ்களையும் மறைத்து, நீங்கள் படிக்காத மெசேஜ்களை மட்டும் ஃபில்டர் செய்து காட்டுகிறது.

இந்த அம்சமானது தினசரி அடிப்படையில் நிறைய மெசேஜ்களை பெறும் பயனர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் படிக்காத அம்சங்களை கண்டறிய உதவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending