
மதுரை : திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் தேசியம் தெய்வீகம் அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு பனை விதை விநாயகர் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்
விளாச்சேரி பகுதியில் தேசியம் தெய்வீகம் என்ற அமைப்பு சார்பில் புதுமை முயற்சியாக பனை விதை விநாயகர் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா பூஜைக்கு பின் மீண்டும் பொதுமக்களிடம் பெறப்பட்டு திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் பனை மர விதைகள் நடப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்கவும், மரம் வளர்ப்பதற்கு ஆர்வமாகவும், பசுமை சூழலை உருவாக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைப்பின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 1,008 பொதுமக்களுக்கு பனை விதை விநாயகர் விநியோகிக்கப்பட்டது.
செய்தி: ரவிச்சந்திரன், மதுரை