தென்காசி ஆட்சியர் முன்னிலையில், திங்கள் முதல் மனு நீதி நாள்!

சற்றுமுன் நெல்லை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
arun sundar dayalan - 2026

புதிதாக தொடங்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் ஆட்சியர் வரும் திங்கள் கிழமை முதல் மனு நீதி நாள் முகாம் நடத்தி, மனுக்களைப் பெற்றுக் கொள்கிறார்.

இது குறித்து தென்காசி ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்ட அறிவிப்பில்…

tenkasi collector annoucement - 2026

புதியதாக தொடங்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், வருகின்ற திங்கள் கிழமை முதல் மக்கள் குறை தீர்க்கும் நாள் 25.11.19 காலை 11 மணிக்கு தென்காசி கோட்டாட்சித் தலைவர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள சுப்பராஜா மண்டபத்தில் வைத்து மனுக்கள் பெற உள்ளார்.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் கொடுத்து பயன் பெறலாம்… என அருண் சுந்தர் தயாளன் செய்தி தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, நவ.22, வெள்ளிக்கிழமை நேற்று தென்காசி மாவட்ட இயக்கத்தை முறைப்படி தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.