தமிழக தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வாக்கு எந்திரங்கள் கேட்டு கடிதம்!

தமிழகம்
election comission - 2026

உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்கு எந்திரங்கள் கேட்டு தமிழக தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து ஆண்டுகள் கடந்த நிலையில் தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவித்து விடுவோம் எனத் தெரிவித்திருந்தது.

voter mechine - 2026

தேர்தல் ஆணையம் இப்போது தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கு தேவையான வண்ண வாக்குச்சீட்டுகளை கொள்முதலுக்கு டெண்டர் அறிவித்துள்ளது.

தேர்தலுக்காக 30 டன் வெளிர் நீல வாக்குச் சீட்டுகள், 56 டன் இளம் சிவப்பு நிற வாக்குச் சீட்டுகள், வாக்குச் சீட்டு காகிதங்கள் 46 டன் எனக் கொள்முதல் செய்ய இருக்கிறது. தேர்தல் நடத்தப்படும் மாதம் என தேர்தல் ஆணையம் எதுவும் அறிவிக்கவில்லை.

eci - 2026

இந்நிலையில் தேர்தலுக்குத் தேவையான வாக்கு எந்திரங்களைக் கேட்டு தமிழக தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் விரைவில் வாக்கு எந்திரங்கள் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.