40 திருடர்களும் திமுகவினர் தான்: சீமானுக்கு ஜெயக்குமார் பதிலடி!

அடடே... அப்படியா?
jeyakumar 1 - 2026

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி சென்ற சீமான், நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் ஆஜரானார்.

அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுக அரசை கடுமையாக சாடினார். “அலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர்.. என்ன இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் உள்ளனர்” என்று பேசியிருந்தார்.

சீமானின் இந்த சர்ச்சை பேச்சு அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி தந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “சசிகலாவை ஆட்சியில், கட்சியிலும் சேர்க்கக்கூடாது என ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டுள்ளது.

seeman - 2026

சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை. இதே நிலை தான் நீடிக்கும். இது கட்சி எடுத்த முடிவு. தனிப்பட்ட கருத்து இல்லை. நடிகர்கள் இனி ஆட்சிக்கு வருவது முடியாத காரியம், கமல் திரைப்படத்தில் நடித்தால் மட்டும் முதல்வராகிவிட முடியாது.

சீமான் கூறும் 40 திருடர்கள் திமுகவினரைத்தான். அலிபாபாவும் 40 திருடர்களும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.