காஷ்மீரில் இலவச தொலைபேசி மையம்! மத்திய அரசு!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
tele - 2026

காஷ்மீர் மாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மாநிலம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி துண்டிக்கப்பட்ட செல்போன் சேவை, சில நாட்களில் ஜம்மு பிராந்தியத்திலும் மீண்டும் வழங்கப்பட்டது.

காஷ்மீரில் சுமார் 70 நாட்களுக்கு பின் தான் அதாவது கடந்த 14ம் தேதி செல்போன் சேவையும் துவங்கப்பட்டது. அதுவும் வெறும் போஸ்ட்பெய்டு இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது. பீரிபெய்டு இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகின்றது.

bsnl - 2026

நீண்ட நேரம் பொது மக்கள் காத்திருந்து, தொலைபேசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் இணைப்புகளை மீண்டும் பெற்று வருகின்றனர். இதைப்போல, புதிய போஸ்ட் பெய்டு இணைப்புகளின் விற்பனையும் பல மடங்கு அதிகரித்து இருக்கின்றது.

tele phone - 2026

இந்நிலையில் பொது மக்களின் வசதிக்காக காஷ்மீர் முழுதுவம் இலவச தொலைபேசி மையம் திறக்கப்படும் என்று என மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது எஸ்டிடி பூத் வாயிலாக பொது மக்கள் அழைப்பு பேசிக் கொள்ளும் வசதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.