ஆலய மீட்பு இயக்கம்! ஹெச்.ராஜாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி!

Published:

29 July19 Chenni highcourt - 2026

இந்து ஆயலங்கள் மீட்பு இயக்கம் என மிக முக்கியமான ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக., தேசிய செயலர் H ராஜா! அவர் இந்த இயக்கத்தின் மூலம் கோவில் சொத்துகள் கொள்ள போகாமல் காத்து, குத்தகை நிலங்களை மீட்க போராடி வருகிறார்.

அண்மையில் கோவில் நிலங்களை மீட்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப் பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் கே கவுல் மற்றும் நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, நமது பாரம்பரியத்தைப் பறை சாற்றும் கோவில் சிலைகளை திருடுவது வருத்தமளிக்கிறது! மன்னர்களும், ஜமீன்தார்களும் கோவில்களுக்காக கொடுத்த நிலங்களை பலர் ஏமாற்றி கபளீகரம் செய்வது வருத்தமளிக்கிறது என்றனர்.

மேலும் பல கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்படுகின்றன, நகைகள் திருடப்படுகின்றன, விலைமதிக்க முடியாத புராதனப் பொருட்கள் கடத்தப்படுகின்றன… இது தான் கோவில்களை பராமரிக்கும் லட்சணமா என்று அறநிலையத் துறையை கண்டித்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் கோவில் நிலங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கவேண்டும் என்றும் அதன் மூலம்ல் இந்த வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், கோவில் நிலங்களை மீட்கவும், கடைகளுக்கு சரியான வாடகை நிர்ணயித்து அவற்றை சரியாக வசூல் செய்யவும் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கூறினர்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

தமிழகத்தில் மட்டும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் 5 லட்சம் ஏக்கருக்கும் மேல் உள்ளன.  அவற்றை மீட்டு கோவில்களுக்கு ஒப்படைப்பதுடன், இனி கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை கோவில்களுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும், வருவாய் குறைவாக உள்ள கோவில்களுக்கு வருவாய் அதிகமாக உள்ள கோவில்களின் வருமானத்தை எடுத்து அனைத்துக் கோவில்களையும் சரியாக பராமரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஹெச்.ராஜாவின் முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றியாகவே பார்க்கப் படுகிறது.

Related articles

Recent articles

spot_img