பிரபல பாடகி இசையமைப்பாளர் ஆனார்!

சினி நியூஸ் சினிமா
adiyathe - 2026

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் பாடகி ஸ்வாகதா. இவர் தற்போது இசையமைப்பாளராகவும் மாறி உள்ளார்.

காற்றின்மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’ பாடல்கள் உள்ளிட்ட நிறைய பாடல்களை பாடியவர் ஸ்வாகதா. வெளிவரவுள்ள பல படங்களிலும் பாடி இருக்கிறார்.

ஸ்வாகதா ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்தப் பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவரே நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப்பொறுப்பையும் ஏற்று அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்.

atiyaathee - 2026

இளைஞர்களிடையே அப்பாடல் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இசை அமைப்பாளர்கள் கதாநாயகர்களாக நடிப்பதைப் போன்று ஒரு பாடகியான ஸ்வாகதா இசை அமைப்பாளராக பரிணாமம் அடைந்துள்ளார். முகிலன் முருகேசன் இயக்கியுள்ள இந்த பாடலின் துவக்கத்தில், “நிலா வரும் சாமம் தோறும் மாமன் ஞாபகம்” என்ற வரிகளில் இசையும் அவரது குரலும் மெஸ்மரிசம் செய்கிறது.

ஸ்வாகதா இசையமைத்து, நடித்த அடியாத்தே பாடலை கெளதம் வாசுதேவ் மேனன் , யுவன் ஷங்கர் ராஜா, ரா. பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குனர் திரு, அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உட்பட பல பிரபலங்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தது இருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.