தீபாவளி ஸ்பெஷல்: ஜவ்வரிசி மிக்சர்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
javarisi - 2026

தேவையானப் பொருட்கள்:

ஜவ்வரிசி – 1௦௦ கிராம்

கரிவேபில்லை – சிறிதளவு

பூண்டு – இரண்டு பல் (நசுக்கியது)

வறுத்த வேர்கடலை – இரண்டு டீஸ்பூன்

நெய் – மூன்று டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

முந்திரி – பத்து

திராட்சை – பத்து

பொடி செய்ய:

காய்ந்த மிளகாய் – இரண்டு

பெருங்காயம் – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

செய்முறை

javarisi - 2026

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜவ்வரிசி போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.

பின், அதே கடாயில் கரிவேபில்லை, நசுக்கிய பூண்டு சேர்த்து ஒரு வறுவறுத்து எடுத்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் வறுத்த ஜவ்வரிசி, முந்திரி, திராட்சை, கரிவேபில்லை, நசுக்கிய பூண்டு, பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.