எச்சரிக்கை… தமிழகத்துக்குள் லஷ்கர் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவல்! உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு தீவிரம்!

Published:

tamil nadu police alert - 2026


  • தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவல்.
  • லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊடுருவல் என்ற தகவலால் அதிர்ச்சி.
  • இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு எச்சரிக்கை.
  • கோவையில் உச்சகட்ட பதற்றத்துடன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது உளவுத்துறை
  • கோவை முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை
  • தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக டிஜிபிக்கு உளவுத்துறை எச்சரிக்கை

தமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையில் முகாமிட்டு இருப்பதாகவும் தமிழக போலீசாருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், கடல் வழியாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளனர். அதனால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

security tighten - 2026தமிழகத்தில் அந்த அந்த மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் தீவிர வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

குறிப்பாக, கோவை பகுதிகளில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக வந்த தகவலின் காரணமாக விமான நிலையம், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்கள் ஆகியவற்றிலும், பொது இடங்களிலும் மோப்ப நாய்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நாசவேலைகளில் ஈடுபட பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதால் கோவை பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img