
சுவிஸ் நாட்டில் கருணைக்கொலைக்கு பயன்படுத்தப்படும் “சர்க்கோ தற்கொலை இயந்திரம்’ தனது சட்டப்பூர்வ மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
மேலும், வரும் 2022-ம் ஆண்டு முதல் நாட்டில் செயல்படத் தயாராக இருக்கும் என்று அதன் உருவாக்கியவர்கள் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய நாட்டில் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலைக்கு விண்ணப்பித்து உள்ளனர்.
சோடியம் பென்டோபார்பிட்டலின் திரவத்தை உட்கொள்ளுவதன் மூலம் அவர்கள் வாழ்வை முடித்துக் கொண்டனர்.
அந்த பெட்டிக்குள் சுத்தமாக காற்று சுழற்சி இருக்காது என்பதால் ஆக்சிஜன் அளவு மிகமோசமான அளவுக்குக் குறைந்து ஹைபோக்சியா அல்லது ஹைபோகேப்னியா ஏற்பட்டு உயிர் பிரியும்.
ஒருவேளை அந்த இயந்திரத்துக்குள் சென்றபிறகு பயம் வந்தால் நோயாளி கண்ணை சிமிட்டினால் போதும் இயந்திரம் திறந்துவிடும். இந்த இயந்திரத்தை எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று செய்ய வேண்டியதை செய்து கொள்ளலாம்.
உயிர் பிரிந்த பின்னர் இந்த இயந்திரத்தின் கீழே இருக்கும் பயோடீகிரேடபிள் கேப்ஸ்யூலை அகற்றி அதனை சவப்பெட்டியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், இந்த இயந்திரம் நோயாளிகளை அவர்கள் இறப்பதற்கு முன் ஆழ்ந்த கோமா நிலைக்குத் தள்ளும். “சர்க்கோ தற்கொலை பாட்” நைட்ரஜனால் நிரப்பப்படுவதன் மூலம் கோமாவிற்கு தள்ளுகிறது.
இதன் மூலமாக ஆக்ஸிஜன் அளவை விரைவாகக் குறைத்து, ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா மூலம் உள்ளே இருக்கும் நபரைக் கொல்லும். இது எந்த மருந்தும் இல்லாமல் ஒரு விரைவான மற்றும் அமைதியான மரணம் என்றும் கூறப்பப்பட்டுள்ளது.
கருணை கொலைக்கு உள்ளாகும் நபர் சுயநினைவை இழப்பதற்கு முன்பு சிறிது மகிழ்ச்சியை உணரலாம் இந்த முறையின் மூலம் முப்பது வினாடிகளில் மரணம் ஏற்படும் என்றும், எந்த பீதியும் இல்லை, மூச்சுத் திணறலும் இல்லை என, இதனை உருவாக்கியுள்ள நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
இந்த இயந்திரம் உள்ளே இருந்தும் இயக்கும் விதமாக பொத்தான்கள் வைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது,
கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தின் சட்டப்பூர்வ மறுஆய்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 3D பரிமாணத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருணைக்கொலை மெஷின் 2022-இல் சுவிட்சர்லந்து நாட்டில் செயல்பட தயாராக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
எக்ஸிட் இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தான் இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது. இது குறித்து அதன் இயக்குநர் டாக்டர் ஃபிலிப் நிட்ஸ்கே கூறும்போது, ஸ்விட்சர்லாந்தில் கருணைக் கொலை சட்டப்பூர்வமானது. இங்கு ஆண்டுக்கு 1300 பேர் வரை இதனைப் பயன்படுத்துகின்றனர்.
இப்போது நாங்கள் உருவாக்கியுள்ள புதிய இயந்திரம் கருணைக் கொலைக்கு உதவும். இது அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
ஆனால்,
நிட்ஸ்கேவை பாராட்டுபவர்களைவிட தூற்றுபவர்களே அதிகமாக உள்ளனர். நிட்ஸ்கேவின் கண்டுபிடிப்பு ஹிட்லர் கால கேஸ் சேம்பரைப் போன்றது என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
யூத்தனேஸியா Euthanasia என்பது உடல் வதையில் இருந்து மீள்வதற்காக ஒருவரின் உயிரைத் திட்டமிட்டு முடிவடையச் செய்தல். வதையா இறப்பு அல்லது கருணைக் கொலை எனக் கூறுகின்றனர். வதையா இறப்புத் தொடர்பான வரையறைகளும் சட்டங்களும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.
எனினும் பெரும்பான்மை நாடுகளில் இதற்கு சட்ட ஏற்பு இல்லை. ஸ்விட்சர்லாந்தில் இது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாளாக நோயுற்றவர்கள், மீள முடியா நோயில் உள்ளவர்கள் இவ்வாறு தற்கொலை அல்லது அவருக்கு உணர்வு இல்லாதபோது மற்றவர்களால் கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.