நிலவில் தெரிந்த மர்மபொருள்.. சீனாவின் ‘யுடு-2’ ரோவர் அனுப்பிய புகைப்படம்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
moon - 2026

நிலவில் மர்ம பொருள் ஒன்று இருப்பதை சீனாவின் ‘யுடு-2’ ரோவர் கண்டுப்பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக விஞ்ஞானிகள் குழு மும்முரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனா ‘லாங் மார்ச்- 3பி’ ராக்மெட் மூலம் ‘சாங்கி- 4’ என்கிற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி வைத்தது. அதிலிருந்து ‘யுடு- 2’ ரோவர் நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் யுடு- 2 ரோவர் அனுப்பியுள்ள புகைப்படத்தில் மர்ம பொருள் ஒன்று நிலவில் காணப்பட்டது. இதுதொடர்பான ஆய்வுகளில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது. விஞ்ஞான உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த பொருள் குறித்து, விரைவில் விடையளிக்க வேண்டும் என சீனா முனைப்பு காட்டி வருகிறது.

அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அறிவியல் பிரிவு செய்தியாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸ், வோன் கர்மன் பாறைப் பகுதியில் இருந்து 80 கி.மீ., துாரத்தில் யுடு – 2 படம் எடுத்து அனுப்பியுள்ளது. அப்படி அனுப்பப்பட்ட புகைப்படத்தில் அறுங்கோண வடிவில் மர்மமான பொருள் இடம்பெற்றுள்ளது.

இதை துல்லியமாக கணிப்பது கடினமாக உள்ளது. முன்னதாக அனுப்பபப்ட்ட படங்களில் பாறைகள் இப்படி காட்சி தந்தது உண்டு. அதனால் இதுவும் அப்படிப்பட்ட பாறையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. யுடு – 2 இன்னும் நெருக்கமாகச் செல்லும் போது மர்ம பொருள் என்னவென்பது தெரியவரும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.