செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் நெல்லை விழாக்கள் விசேஷங்கள்
surasamharam sct - 2026

செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி கோயிலில் சூரசம்ஹார விழா இன்று மாலை கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை வழிபட்டனர்.

நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் உள்ள தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகரநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சஷ்டியை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

surasamharam sct1 - 2026

இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா இடம்பெற்றது. 5.30 மணிக்கு ஸ்ரீமுருகர் ஆனைமுகம், சிங்கமுகம், மகாசூரன் ஆகிய முகங்களை கொண்ட சூரனை சம்ஹாரம் செய்தார்.

surasamharam sct3 - 2026

மூன்று முக்கிய பகுதிகளில் நடந்த சம்ஹார நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” வெற்றி வேல் வீர வேல் என கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை வழிபட்டனர்.

surasamharam sct4 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.