இந்து முறைப்படி ஜெர்மன் இளைஞருடன் தமிழ்ப்பெண் திருமணம்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கோவை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
german 1 - 2026

கோவையில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த இளைஞர், கொங்குநாட்டு பெண்ணை இந்து கலாச்சாரப்படி திருமணம் செய்து கொண்டார்.

கோவை துடியலூர் அருகே உள்ளபன்னிமடையை சேர்ந்த சுப்பிரமணியம் – கலாவதி ஆகியோரின் மகள் வித்யபிரபா (வயது 28). கோவையில் கணினிப்பொறியியல் படித்துவிட்டு ஜெர்மன்நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

அப்போது, அதே நிறுவனத்தில் பணி புரிந்தஷீல்டஸ் என்பவரின் மகன்மைக்கேல் ஷீல்டஸ் (வயது 29) என்பவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தங்கள் வீட்டாரிடம் பேசி சம்மதத்தைப் பெற்றனர்.

இந்நிலையில், மைக்கேல் ஷீல்டஸ் மற்றும் வித்யபிரபா ஆகியோருக்கு கோவை வெள்ளகிணர் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது மைக்கேல் ஷீல்டஸ் குடும்பத்தினர் வரமுடியாததால்,வித்யபிரபாவின் தாய் மாமா கனகராஜ், பார்வதி ஆகியோர் மனமகனின் பெற்றோராக இருந்து சடங்குகளைச் செய்தனர்.

பாதபூஜை செய்தல், மலர் வாழ்த்துதல், மாலை மாத்துதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. இந்த திருமணத்திற்கு ஜெர்மனியில் இருந்து மைக்கேல் ஷீல்டஸ் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களும் திருமண விழாவின் போது இந்து கலாச்சார உடை அணிந்து விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.