ஒரே பாதையில்… இரு ரயில்கள் ‘நேருக்கு நேர்’! 30 பேர் காயம்!

இந்தியா சற்றுமுன்
kachikuda express train hits - 2026

ஆந்திராவில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. தவறான சிக்னல் காரணமாக ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

புறநகர் ரயிலும் – எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காச்சிகூடா ஹந்த்ரி எக்ஸ்பிரஸுடன் எம்எம்டிஎஸ் மோதியதில், 30 பேருக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது.

காச்சிகூட ‘நிம்போலி அட்டா’ வில் இன்று திங்கள் காலை ரயில் விபத்து நேர்ந்தது. எம் எம் டி எஸ் ரயிலும் ஹந்த்ரீ எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதிக்கொண்டன. தொழில்நுட்பக் கோளாறால் ஹந்த்ரீ எக்ஸ்பிரஸ் நின்றிருந்த ட்ராக்கில் பலக்நாமாவில் இருந்து செகந்திராபாத் செல்லும் எம் எம் டி எஸ் வேகமாக வந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

kachikuda express train hits1 - 2026

கர்னூலில் இருந்து சிகந்திராபாத் வரும் ஹந்திரீ எக்ஸ்பிரஸ் காச்சிகூடாவில் நின்றிருந்தது. அதனை கவனிக்காத எம்எம்டிஎஸ் அதன் மீது வந்து மோதியது. இந்த சம்பவத்தில் பாசஞ்சர் ரயில் எம் எம் டி எஸ் ரயில் இந்த இரண்டிலும் இருந்த பயணிகளும் காயமடைந்துள்ளனர்.

எக்ஸ்பிரஸை கவனிக்காமல் வேகமாக வந்த எம்எம்டிஎஸ் ரயில் நான்காவது பிளாட்பாரத்தில் நின்று இருந்த இன்டர்சிட்டி ரயில் மீது வந்து மோதியது. இதில் எம்எம்டிஎஸ் ரயிலின் 3 போகிகள் நசிங்கின. டிரைவர் மோசமாக காயமடைந்தார்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

லோகோபைலட் சந்திரசேகர் இஞ்சினில் சிக்கிக் கொண்டார். அதை காரிகள் அவரை வெளியே எடுக்க முயற்சித்து வருகின்றனர். விபத்து நடந்த உடனேயே வந்த அதிகாரிகள் உதவி செயல்களில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை காச்சிகூடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது ட்ராக்கில் செல்ல வேண்டிய ரயில் நாலாவது ட்ராக்கில் சென்றதால் நின்றிருந்த ரயில் மீது மோதியுள்ளது. இதனால் 6 பெட்டிகள் பக்கத்து டிராக்கில் போய் விழுந்தன.

காச்சிகூடாவிலிருந்து செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். எதிர்பாராத இந்த விபத்தால் எம்எம்டிஎஸ் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இரண்டு ரயில்களுக்கும் இடையே சிக்கிய லோகோ பைலட் “காப்பாற்றுங்கள்…! காப்பாற்றுங்கள்…!” என்று கூச்சலிட்ட குரல் அங்கிருந்த பலரையும் சோகமயமாக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.