
நாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தில்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மும்பை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வெங்காய உற்பத்தியில் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதும் வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த இரு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை அதிகமான அளவில் பெய்தது. அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வெங்காயப் பயிர்கள் அழிந்தன. அதன் விளைவாக கடந்த இரு மாதங்களாக பெரிய வெங்காயத்தின் அளவு குறைந்து அதன் விலை உயர்ந்தது.
தற்போது மொத்த மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.60 முதல் 90 வரை, ரகத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்திற்கு தேவையான வெங்காயம் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து விளைவிக்கப்பட்டு வருகிறது. இது போதாத காரணத்தினால், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.
வெங்காயத் தட்டுப்பாட்டுப் போக்கை சுமார் 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசின் ஏஜென்சி எம்எம்டிசி முடிவு செய்துள்ளது. அதுதொடர்பாக கடந்த 7ம் தேதி டெண்டர் வெளியிட்டது. இவை இன்னும் முடிவு செய்யப்பட்டு, இறக்குமதி செய்ய பல வாரங்கள் ஆகலாம்.
வெங்காய வியாபாரிகள் தங்களிடம் உள்ள வெங்காயங்களை இருப்பு வைப்பதற்காக பதுக்கி வைப்பதாகவும் புகார் எழுந்தது.
நாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தில்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா, சண்டிகர், மும்பை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.