
வரகரிசி சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள் :
வரகரிசி -கால் கிலோ
பாசிபருப்பு =50 கிராம்
வெல்லம் -கால் கிலோ
முந்திரி – 10
திராட்சை -10
நெய் -தேவைக்கேற்ப
பால் -1 கப்
தேங்காய் துருவல் =கால் கப்
ஏலக்காய் -3
செய்முறை :

வரகு அரிசி, பாசிப்பருப்பை லேசாய் வறுக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.
தண்ணீரை கொதிக்க வைத்து, வறுத்த பாசிப்பருப்பை முதலில் போடவும். பாசிப்பருப்பு அரை பதம் வெந்ததும், பின்னர், வரகு அரிசியை போட்டு குழைய வேகவிடவும்.
பிறகு வெல்லம் சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும்.
பின் அதில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இப்போது சுவையான வரகரிசி சர்க்கரை பொங்கல் ரெடி.