234 இடங்கள்ல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: அஸ்வின் பகீர்

சற்றுமுன் சென்னை விளையாட்டு

சென்னை:
தமிழகத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தலுக்கு வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சூசகமாக தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக உள்ள சூழ்நிலையில், அவருக்கு எதிராக தமிழகம் முழுக்க ஆண்கள், பெண்கள், இளைஞர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தானும் ஒரு இளைஞராக ஒரு எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னையை சேர்ந்த இவர் சசிகலாவுக்கு எதிரான எதிர்ப்பை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

‘தமிழக இளைஞர்களுக்கு 234 வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்க உள்ளது’ என்று அஸ்வின் டிவிட் செய்துள்ளார். 234 தொகுதிகள் தமிழகத்தில் இருப்பதையும், விரைவில் ஆட்சி கலைந்து தேர்தல் நடைபெறும், என்பதையும் அஸ்வின் பூடகமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், 234 இடங்களிலும் இளைஞர்கள் போட்டியிட முன்வர வேண்டும் என்ற தனது ஆசையையும் பூடகமாக குறிப்பிட்டுள்ளார் அஸ்வின். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் எழுச்சியுடன் போராடிய நிலையில் அஸ்வின் இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது வேலை வாய்ப்பு அழைப்புதான், அரசியல் அல்ல என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நடிகர் கமல்ஹாசனும், சூசகமாக தனது டிவிட்டில் இதனை கிண்டல் செய்து குறிப்பிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, ‘சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்போது சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்ட நிலையில் கமல் அவரது டுவிட்டர் பக்கத்தில் தனது டுவிட்டரில் “பீலிபெய் சாகாடும் அச்சிறும்அப்பண்டம் சால மிகுத்துப்பெறின்” என்ற திருக்குறளை வெளியிட்டிருந்தார். பின் குறளைத் திருத்தி, பீலிப்பேய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டஞ் சால மிகுத்து பெயின்.. என்னும் திருக்குறளை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது சசிகலாவை பற்றி மறைமுகமாக கமல்சாடுவதை போல உள்ளதாக நெட்டிசன்கள் பேசிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.