உள்ளாட்சித் தேர்தலுக்கு பிரேக் போடும் திமுக.,! உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் தமிழகம்
election comission - 2026

உள்ளாட்சித் தேர்தலுக்கு பிரேக் போடும் விதத்தில்,திமுக., புதிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

வார்டு வரையறை மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளை முழுமையாக முடித்தபிறகே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட வேண்டுமென உத்தரவிடக் கோரி, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், வார்டு வரையறை, இடஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறையிலான ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளையும் முழுமையாக முடித்தபிறகே தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.