
தமிழகத்தில் நாளை இரவு தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை அல்லது மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், கடந்த 24 மணி நேரத்தில் தாம்பரத்தில் 15 செ.மீ., , ஜெயங்கொண்டத்தில் 10 செ.மீ., காட்டுமன்னார்கோவிலில் 8 செ.மீ., சீர்காழியில் 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை இரவு முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு பலத்த மழை தொடங்கும். கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்,

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு இலங்கையின் தெற்கு கடல் பரப்பிற்கு மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்.
அடுத்த மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடிக்கும்! 20 நாட்கள் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் நடப்பு மாதத்தில் இப்போது வரை 35 செ.மீ., அளவுக்கு மழை பெய்ய வேண்டியது… ஆனால் 32 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. சென்னையில் 59 செ.மீ., அளவுக்கு மழை பெய்ய வேண்டிய நிலையில் 39 செ.மீ., அளவே மழை பெய்துள்ளது என்று கூறினார் புவியரசன்.



