மச்சான்ஸ் புகழ் நடிகை, பாஜக.,வில் ஐக்கியம்!

சற்றுமுன் சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்
namitha bjp - 2026

மச்சான்ஸ் புகழ் நடிகை நமீதா இன்று தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார்.

அதிமுக., வில் இருந்த நடிகை நமீதா, பாஜக., செயல் தலைவர் நட்டா முன்னிலையில் பா.ஜ., வில் இணைந்தார்.

பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், நடிகை நமீதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக.,வில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

இந்நிலையில் திருவள்ளூர் நடந்த விழாவிற்கு வந்த பாஜக., செயல் தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் நமீதா, பாஜக., வில் இணைந்தார்.

பாஜக., வின் முரளிதர் ராவ், ஹெச்.ராஜா, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

இனிமே எப்படி ஒருவரையொருவர் கூப்பிட்டுக்குவாங்க?
வாங்க மச்சான்ஸ்ஜி,
போங்க மச்சான்ஸ்ஜி,
சொல்லுங்க மச்சான்ஸ்ஜி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.