சஜ்ஜனார் சார்! அதேபோல் என்கவுண்டர் செய்யுங்க!: பெண்களின் கண்ணீர்க் கதறல்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
hyd cops - 2026

காமுகர்களின் கையில் பலியான டாக்டர் பிரியங்கா வசிக்கும் அப்பார்ட்மெண்ட்வாசிகள் சைபராபாத் சிபி சஜ்ஜனாரை சந்தித்தனர். இந்த கேசில் குற்றவாளிகளை கடினமாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது முன்பு வரங்கல்லில் நடந்த ஆசிட் தாக்குதல் சம்பவத்தில் சிபி சஜ்ஜனார் தலைமையில் நடந்த என்கவுன்டர் பற்றி எடுத்துக் கூறினார்கள். இப்போது பிரியங்கா வழக்கில் எப்படிப்பட்ட தண்டனை விதிக்க போகிறீர்கள் என்று பெண்கள் கண்ணீரோடு கேட்டனர்.

hyd city cop - 2026
v c sajjanaar

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் வரங்கல் சம்பவம் போலவே என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று அவரை வற்புறுத்தினர்.

அவர்களுக்கு ஆறுதல் கூறிய சிபி சஜ்ஜனார் பெண்களின் பாதுகாப்பு குறித்து அவர்களோடு உரையாடினார். சம்ஷாபாத் பகுதியில் பெண்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சனையும் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வதாக சிபி அவர்களுக்கு உறுதி அளித்தார்.

இதனிடையே, ப்ரியங்கா ரெட்டிக்கு ‘தைர்யா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தில்லி சம்பவத்தில் பாதிக்கப் பட்டுள்ள பெண்ணுக்கு நிர்பயா என்று வைக்கப் பட்டுள்ளது போல், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு தைர்யா என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.