எச்சரிக்கை…! ஆபாச படம் பாக்குறதுல சென்னைவாசிகள்தான் அதிகமாம்! டிஜிபி எடுக்கிறார் அதிரடி!

அடடே... அப்படியா? கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
13 June26 child abuse - 2026

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் லாரி டிரைவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாநில காவல் துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். இதை அடுத்து பெண்கள் தொடர்பான குற்றங்களைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தி இருக்கின்றது இந்த விவகாரம்.

இதனிடையே, ஆபாச பட விவகாரம் குறித்து டி.ஜி.பி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அண்மையில் இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு அமெரிக்க உளவுத்துறை அமைப்பு அனுப்பிய தகவலில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்க்கும் இளைஞர்கள் இந்தியாவில்தான் அதிகம் என்றும், குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகம் என்றும், தமிழகத்தில் சென்னையில் தான் அதிகம் என்றும் தகவலை வெளியிட்டு இருக்கின்றனராம்.

இந்நிலையில், இதற்கான பட்டியல் தமிழக காவல்துறையிடம் கொடுக்கப் பட்டிருப்பதாக கூறப்பட்டது. தகவல் உறுதியானதுதான் என்பதை குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் டிஜிபி தெரிவித்திருக்கின்றார். குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்களின் பட்டியலும் அதில் இருக்கின்றதாம்.

இது குறித்துக் கூறிய அவர், “அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை தொடங்கி இருக்கின்றோம். அவ்வாறு கைது செய்யப் படுபவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக கையாளுதல் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.